டூரின் (இத்தாலி): கடைசித் தருணத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பால் ரியால் மட்ரிட் காற்பந்து குழு கரைசேர்ந்தது. யுவென்டஸ்=ரியால் மட்ரிட் குழுக்கள் மோதிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்று முதல் ஆட் டத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ 'பைசிக்கிள் கிக்' மூலம் அற்புதமாக கோல் அடிக்க, 3=0 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றது ரியால் குழு. இந்நிலையில், இரண்டாவது காலிறுதி ஆட்டம் நேற்று அதி காலை யுவென்டசின் அல்லயன்ஸ் அரங்கில் நடைபெற்றது. ஆட்டத்தின் 2வது, 37வது நிமி டங்களில் மாரியோ மண்ட்ஸ`கிச் தலையால் முட்டி இரு கோல்களை அடிக்க, யுவென்டஸ் குழுவினரின் முகங்களில் நம்பிக்கை பிறந்தது. அரைமணி நேர ஆட்டம் எஞ்சி இருந்த நிலையில் மட்டுய்டியின் கால்கள் மூலம் வந்த கோலால் ஆட்டம் சமனுக்கு வர, அரங்கில் குழுமியிருந்த யுவென்டஸ் ரசிகர் கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இன்னும் ஒரு கோல் போட்டால் போதும், அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடலாம் என்பதால் யுவென் டஸ் வீரர்கள் முழுமூச்சாக கோல் முயற்சியில் இறங்கினர். இருப் பினும், இறுதியில் அதிர்ஷ்ட தேவதை ரியாலையே தழுவியது. இறுதியில் சேர்க்கப்பட்ட சில நிமிட கூடுதல் நேரத்தின்போது ரியால் குழுவின் இளம் வீரர் லூக்கஸ் வாஸ்குவெஸ் பந்துடன் வலையை நோக்கி முன்னேறிய போது, யுவென்டஸ் ஆட்டக்காரர் மெஹ்தி பெனாட்டியா பந்தைத் தட்டிப் பறிப்பதற்காக தமது காலை குறுக்கேவிட்டார். அதோடு, அவரது கையும் வாஸ்குவெசின் முதுகை இடிக்க, வாஸ்குவேஸ் தடுமாறி விழுந்தார். நடுவர் சற்றும் யோசிக்காமல் ரியாலுக்கு பெனால்டி வழங்க, அரங் கமே அதிர்ச்சியில் உறைந்தது. நடுவரின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அவரை இடிக்க வும் செய்ததால் யுவென்டஸ் குழுத் தலைவரும் கோல் காப்பாளருமான புஃபான் சிவப்பு அட்டை காட்டப் பட்டு வெளியேற்றப்பட்டார். கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிடாது கோல் ஆக்க, 4=3 என முன்னிலை பெற்று ரியால் அரையிறுதிச் சுற் றுக்குள் நுழைந்தது.
வெற்றி கோலை அடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்த உற்சாகத்தில் இப்படிச் சட்டையைக் கழற்றி உடல்வலுவைக் காட்டிய ரியால் மட்ரிட் ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை நடுவர் மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தார். படம்: ஏஎஃப்பி

