கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களுக்கான பூப்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் முன்னேறியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இங்கிலாந்து வீரர் ராஜிவ் அவுசப்பை எதிர்கொண்டார். இதில் 21=10, 21=17 எனும் நேர்செட்டுகளில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை 21=14, 18=21, 21=17 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லீயை எதிர்கொண்டார். இதில் 21=18, 21=8 எனும் நேர்செட்டுகளில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாய்னா நேவாலுடன் பலப்பரிட்சை செய்கிறார்.

