முதல் இடத்தில் ஃபெராரியின் வெட்டல்

முதல் இடத்தில் ஃபெராரியின் வெட்டல்

1 mins read

கோ ல்டு கோஸ்ட்: இன்று நடைபெறும் ஷங்ஹாய் எஃப்1 கார் பந்தயத்தை ஃபெராரியின் செபாஸ்டியன் வெட்டல் முதல் இடத்திலிருந்து ஆரம்பிப்பார். எஃப்1 பந்தயத்தை அவர் 52வது முறையாக முதல் நிலையில் இருந்து தொடங்க இருக்கிறார். நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் அவர் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தையும் ஃபெராரி பிடித்துள்ளது. வெட்டலைவிட கிமி ரெய்கோனன் 00.87 வினாடிகள் மெதுவாக தகுதிச் சுற்றை முடித்தார்.

மெர்சிடிஸ் குழுவின் வால்ட்டேரி போட்டாஸ் மூன்றாவது இடத்தையும் லூவிஸ் ஹேமில்டன் நான்காவது இடத்தையும் பிடித்தனர். ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பனும் டேனியல் ரிக்கார்டோவும் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.2018-04-15 06:00:00 +0800