பதக்கங்களைக் குவித்த இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள்

பதக்கங்களைக் குவித்த இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள்

1 mins read

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோரின் ஆதிக்கம் தொடர்கிறது. இந்நிலையில், மகளிருக்கான 'ஃப்ரீஸ்டைல்' மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடாவின் ஜெசிக்கா மெக்டோனலை வீழ்த்தினார்.

ஆண்களுக்கான 'ஃப்ரீஸ்டைல்' மல்யுத்தப் போட்டியின் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சோம்வீர் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் கனடாவின் அலெக்சாண்டர் மோரை வீழ்த்தினார். இந்நிலையில், மகளிருக்கான 'ஃப்ரீஸ்டைல்' மல்யுத்தப் போட்டியின் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக் ‌ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் ஆண்களுக்கான 125 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சுமித் தங்கப்பதக்கம் வென்றார்.