கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 45=48 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் மகுடம் சூடினார். அவர் இறுதிப்போட்டியில் வடஅயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஒஹாராவை 5=0 என வீழ்த்தினார். ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கௌரவ் சோலங்கி தங்கப் பதக்கம் வென்றார்.
அவர் இறுதிப்போட்டியில் வட அயர்லாந்து வீரர் பிரண்டன் இர்வினை 4=1 எனும் புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கௌஷிக் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஹேரி கார்சைட்டிடம் 3=2 எனும் புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார். இதில் ஆண்களுக்கான 46= 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமிட் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் கலால் யபாயிடம் 3=1 எனும் புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.
தங்கம் வென்ற 35 வயது மேரி கோம். படம்: ஏஎஃப்பி