ஒவ்வோர் ஆட்டத்திலும் முன்னேற்றம்: வில்லியம்சன் பெருமிதம்

1 mins read

கோல்கத்தா: பதினோராவது ஐபிஎல் டி20 தொடரை 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஈடன் கார்டன் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் அந்த அணி ஐந்து விக்கெட் வித்தி யாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. ஹைதராபாத் பந்துவீச்சாளர் கள் சிம்மசொப்பனமாக விளங்க, கோல்கத்தா அணியினர் ஓட்டம் குவிக்கப் பெரும் சிரமப்பட்டனர். இறுதியில் கோல்கத்தா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப் பிற்கு 138 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

எளிதான இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்குத் தமது சுழற்பந்து வீச்சின் மூலம் சற்று நெருக்கடி தந்தார் சுனில் நரைன். இருப்பினும், அவ்வணியின் வெற் றியைத் தடுக்க அவரது முயற்சி மட்டும் போதுமானதாக இல்லை.