மான்செஸ்டர் குழு: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வது 'சிறந்த சாதனைகளில் ஒன்று'

1 mins read
e9652005-322b-4d9d-b181-350863f15dd5
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வது தமது காற்பந்து வாழ்க்கையின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாக இருக்கும் என்று மான்செஸ்டர் குழுவின் நிர்வாகி பெப் கார்டி யோலா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 3=1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் சிட்டி குழு பட்டத்தை நெருங்கியிருக்கிறது. வெம்பிளி விளையாட்டரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் கேப்ரியல் ஜீசஸ், இல்கே குண்டோகன், ரஹீம் ஸ்டெர்லிங் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலை அடித்து சிட்டிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

ஸ்பர்ஸ் சார்பில் விழுந்த ஒற்றை கோலுக்குச் சொந்தக்காரர் கிறிஸ் டியன் எரிக்சன். பட்டியலின் கடைசி நிலையில் இருக்கும் வெஸ்ட் புரோம்விச்சுடன் நேற்றிரவு மோதவிருந்தது, சிட்டி யைவிட 16 புள்ளிகள் பின்தங்கி இரண்டாம் நிலையில் இருந்த மான்செஸ்டர் யுனைடெட். அந்த ஆட்டத்தில் யுனைடெட் தோற்று இருக்கும் பட்சத்தில் இந்நேரம் சிட்டி இப்பருவத்தின் வெற்றி யாளராக வாகை சூடியிருக்கும்.

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் ஹேரி கேன் (வலது) வசம் பந்து சென்றுவிடாமல் முட்டுக்கட்டையிட முயலும் மான்செஸ்டர் சிட்டி ஆட்டக்காரர் வின்சென்ட் கொம்பனி (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்