சாய்னாவிடம் சரணடைந்த சிந்து

சாய்னாவிடம் சரணடைந்த சிந்து

1 mins read

மகளிர் ஒற்றையர் பூப்பந்துப் போட்டியில் தங்கமும் வெள்ளியும் இந்தியா வசமாகின. களத்தில் பரம எதிரிகளாகத் திகழும் சாய்னா நேவாலும் பி.வி.சிந்துவும் இறுதிப் போட்டியில் மோதினர். ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடியபோதும் இறுதியில் 21-18, 23-21 என நேர் செட்களில் வென்று வெற்றியைச் சுவைத்தார் சாய்னா. இதன்மூலம், காமன்வெல்த் போட்டிகளில் இருமுறை தங்கம் வென்ற முதல் இந்திய பூப்பந்து ஆட்டக்காரர் எனும் சிறப்பை அவர் பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதியில் மலேசிய வீரர் லீ சொங் வெய்யிடம் 21-14, 18-21, 21-17 என்ற செட்களில் தோற்று தங்கத்தை இழந்தார் ஸ்ரீகாந்த்.