கோல்டு கோஸ்ட்: சிங்கப்பூர் மேசைப் பந்து விளையாட்டாளர் காவ் நிங், 35, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களின் இறுதி நாளான நேற்று இரு தங்கப் பதக்கங்களை வேட்டையாடி னார். ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் காவ் நிங் 11=7, 11=8, 5=11, 3=11, 11=9, 11=5 என்ற புள்ளிக் கணக்கில் நைஜீரியாவின் குவாத்ரி அருணாவை வீழ்த்தினார். முன்னதாக, கலப்பு இரட்டையர் பிரிவில் யு மெங்யு உடன் இணைந்து களமிறங்கிய அவர் இறுதிப் போட்டி யில் 12-10, 12-10, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்ட் = ஹோ டின் இணையை மண்கவ்வச் செய்தார். இதனுடன் சேர்த்து 21வது காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் மேசைப்பந்துக் குழு மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என ஆறு பதக்கங்களை அள்ளியது. ஒட்டுமொத்தமாக சிங்கப் பூர் ஐந்து தங்கம், இரு வெள்ளி, இரு வெண்கலம் என ஒன்பது பதக்கங் களைக் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 13ஆம் நிலையில் முடித்தது.
போட்டிகளை ஏற்று நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கம் உட்பட 198 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. 45 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றிய இங்கிலாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 26 தங்கப் பதக்கங்களுடன் மொத் தம் 66 பதக்கங்களைத் தனதாக்கி, மூன்றாமிடத்தைப் பிடித்தது இந்தியா. தங்கம் வென்றோருக்கு ரூ.1.5 கோடி இந்நிலையில், தங்கப் பதக்கம் வென்ற ஹரியானா விளையாட்டாளர்களுக்கு ரூ.1.5 கோடி ரொக்கப் பரிசு வழங் கப்படும் என அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒன்பது தங்கம், ஆறு வெள்ளி, ஏழு வெண்கலம் என அம்மாநிலத்தைச் சேர்ந்தோர் மட்டும் 22 பதக்கங்களை வென்று தந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.75 லட்சமும் வெண்கலம் வென்றோருக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என்று ஹரியானா விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் அறிவித்தார். கடந்த பதினொரு நாட்களாக நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முடிவுக்கு வந்ததையடுத்து நிறைவு விழா நேற்றிரவு கோலாகலமாக நடந்தேறியது. அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் நடக்கவிருக்கின்றன.

