சண்டிகர்: ஈராண்டுகளுக்குப்பின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி களுக்குத் திரும்பிய மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்பருவத்தில் தனது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் அவ்வணி நான்கு ஓட்டங்களில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்தது. போட்டியை முடித்துவைப்பதில் வல்லவரான டோனி இறுதிவரை களத்தில் நின்று 44 பந்துகளில் ஆறு பவுண்டரி, ஐந்து சிக்சர் உட்பட 79 ஓட்டங்களைக் குவித் தும் அது சென்னை அணிக்கு வெற்றி தேடித் தரவில்லை. முதலில் பந்தடித்த பஞ்சாப் அணிக்கு ராகுல்=கெய்ல் இணை யின் அதிரடித் தொடக்கம் வலு வான அடித்தளமிட்டது.
கடந்த ஏழு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கெய்ல், பஞ்சாப் அணி சார்பில் களமிறங் கிய முதல் போட்டியிலேயே தமது வல்லமையைக் காட்டினார். அவர் 33 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசினார். ராகுல் 37, மாயங்க் அகர்வால் 30, கருண் நாயர் 29 ஓட்டங்களைக் குவிக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஏழு விக் கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களை எடுத்தது.
கிங்ஸ் லெவன் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை விளாசியதே டி20 போட்டிகளில் டோனியின் (இடது) அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை. படம்: ஏஎஃப்பி

