கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவுபெற்றன. இந்நிலையில், நிறைவு விழா களையிழந்து காணப்பட்டதால் ரசிகர்கள் பாதியிலேயே வாயிலை நோக்கி நடையைக் கட்டினர். நிறைவு விழா தொடங்குவதற்கு முன்னரே விளையாட்டாளர்கள் அரங்கிற்கு வந்துவிட்டதால் அவர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தைக் காண விரும்பிய தொலைக்காட்சி நேயர்கள் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்பட்டது. அத்துடன் சிலர் நீண்ட நேரம் பேசியதும் விமர்சிக்கப்பட்டது. இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பீட்டர் பேட்டி, நிறைவு விழா தாங்கள் திட்டமிட்டபடி நடந்தேறவில்லை என்றும் விளக்கமளித்தார்.
களையிழந்த நிறைவு விழா: மன்னிப்பு கோரிய ஏற்பாட்டுக் குழுத் தலைவர்
1 mins read

