இணைய செய்தியை மறுக்கும் எம்.பி.

இணைய செய்தியை மறுக்கும் எம்.பி.

1 mins read

இம்மாதம் 10ஆம் தேதி இரவு யீ‌ஷுன் விளையாட்டரங்கத்தில் காற்பந்துப் போட்டி நடந்துகொண்டிருந்தபோது அங்குள்ள மின்னொளி விளக்குகளில் இரண்டு திடீரென அணைக்கப் பட்டன. இதனால் அந்தப் போட்டி பாதியிலேயே கைவிடப் பட்டது. நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவ்விளக்குகள் அணைக்கப்பட்டதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், "யீ‌ஷூன் விளையாட்டரங்க விளக்குகளால் கண் கூசுவதாக சில குடியிருப்பாளர்கள் புகார் செய்ததால் நான் அவற்றை அணைக்க உத்தரவிட்டதாக 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் உண்மையில்லை," என மறுப்புத் தெரிவித்துள்ளார் திருவாட்டி லீ பீ வா. போட்டியை நிறுத்தும் படி தான் அறிவுறுத்தவில்லை என்ற அவர், 'ஸ்போர்ட்எஸ்ஜி' அமைப்பின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யவுள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.