இபிஎல் பட்டம் வென்றது மேன்சிட்டி

இபிஎல் பட்டம் வென்றது மேன்சிட்டி

1 mins read
11e5e49a-df30-443d-b00c-f6b050ed16ca
-

மான்செஸ்டர்: முந்திய வார இறுதி யில் பட்டியலின் முதல்நிலையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு, நேற்று முன்தினம் இரவு கடைசி நிலையில் இருக்கும் வெஸ்ட் புரோம்விச் ஆல்பியன் குழுவிடம் தோற்றது முற்றிலும் முரணாக இருந்தது. இதனால் மேன்யூவைவிட 16 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ள மேன்சிட்டி இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றியது. மேன்சிட்டிக்கு எதிரான ஆட் டத்தில் மேன்யூவின் நாயகனாக மிளிர்ந்த பால் போக்பா, வெஸ்ட் புரோமுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக விளையாடினார். அத னால் 58வது நிமிடத்தில் அவருக் குப் பதிலாக ஆன்டனி மார்சியால் களமிறக்கப்பட்டார். ஆட்டம் முடிய 17 நிமிடங்கள் இருந்தபோது ஜே ரோட்ரிகெஸ் தலையால் முட்டி கோலடிக்க, வெஸ்ட் புரோம் 1-0 என்ற கணக் கில் வெற்றி பெற்றது.

சொந்த ஓல்டு டிராஃபோர்ட் அரங்கில், பலம் குன்றிய குழு விடம் அடைந்த இந்த எதிர்பாராத தோல்வியால் அதிர்ச்சியடைந்த மேன்யூ நிர்வாகி மொரின்யோ, தமது குழுவினரின் செயல்பாட்டை விளாசித் தள்ளினார்.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் புரோமின் வெற்றி கோலை அடிக்கும் ஜே ரோட்ரிகெஸ் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்