சென்னை: காமன்வெல்த் விளை யாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2.20 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியா ஒட்டுமொத்தமாக 66 பதக்கங்கள் கைப்பற்றிது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 11 பதக்கங்கள் கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டேபிள் டென்னிசில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற சத்தியன், சரத் கமலுக்கு தலா ரூ.50 லட்ச ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். "அதே போல், ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல் கார்த்திக்குக்கு ரூ.60 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோருக்கும் தலா ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.

