லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற் பந்தின் அரையிறுதிப் போட்டிக் கான மேன்யூ குழுவில் அலெக்சிஸ் சான்செஸ், ஹெரேரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சேர்க்கப்பட மாட் டார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டமொன்றில் பிரிமியர் லீக்கின் கடைநிலைக் குழுவான வெஸ்ட் பிரோம்விச்சிடம் 1-0 என மேன்யூ தோல்வி அடைந்தது. இந்நிலையில் வரும் ஞாயிறு அதிகாலை நடைபெறவுள்ள எஃப்ஏ கிண்ண அரையிறுதியில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை யும் நாளை அதிகாலை நடைபெற உள்ள இபிஎல் ஆட்டத்தில் போர்ன்மத் குழுவையும் எதிர் கொள்கிறது மேன்யூ.
இதற்கிடையே பேசிய மேன்யூ நிர்வாகி மொரின்யோ, "விளையாட் டாளர்கள் எப்படி விளையாடுகிறார் கள் என்பதைப் பொறுத்துத்தான் நான் தேர்வு செய்வேன். "வெஸ்ட் பிரோம் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக விளையாடிய ஒரு சிலருக்கு வெம்பிளே அரங்கில் நடைபெற வுள்ள எஃப்ஏ கிண்ணப் போட்டி யில் இடம் கிடையாது," என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், "எஃப்ஏ கிண்ணப் போட்டியில் விளையாட விரும்புபவர்களுக்கு, போர்ன்மத் குழுவிற்கு எதிரான ஆட்டம் ஒரு வாய்ப்பு. "இப்போட்டியில் அவர்கள் தங் களது திறனை நிரூபித்து, எஃப்ஏ கிண்ணக் குழுவில் இடம் பெற முயற்சி செய்யலாம்," என்று சொன்னார்.
போக்பாவின் மோசமான ஆட் டம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த மொரின்யோ, "போக்பா மட்டும் மோசமாக விளையாட வில்லை. முழு ஆட்ட நேரமும் விளையாடியவர்களில் சிலரும் மோசமாக விளையாடினார்கள். போக்பா ஒன்றும் அவர்களைவிட மோசமாக விளையாடவில்லை. "மஞ்சள் அட்டை பெற்றதால் போக்பா இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். எனவே அவருக்குப் பதில் மாற்று ஆட்டக்காரரைக் களமிறக்கினேன்," என்றார். இதற்கிடையே காயத்திலிருந்து குணமடைந்து வரும் கோல் காப்பாளர் பில் ஜோன்ஸ் நாளை அதிகாலை போர்ன்மத் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

