சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற உள்ள அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக மூன்று முன் னணி குழுக்கள் தங்களது வரு கையை உறுதி செய்துள்ளன. நேற்று மரினா பே சாண்ட்ஸ் கலை அறிவியல் அருங்காட்சியகத் தில் நடந்த செய்தியாளர் கூட்டத் தில் இது அறிவிக்கப்பட்டது. அப்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆர்சனல், பிரெஞ்சு குழுவான பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன், ஸ்பானிய காற்பந்துக் குழுவான அட்லெட்டிகோ மட்ரிட் ஆகிய குழுக்கள் வரும் ஜூலை மாத இறுதியில் சிங்கப்பூர் வரவுள் ளதாகக் கூறப்பட்டது.
ஜூலை 26ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் அட்லெட் டிக்கோ மட்ரிட், ஆர்சனலுடன் மோதுகிறது. பிஎஸ்ஜியை ஜூலை 28ஆம் எதிர்கொள்கிறது ஆர்சனல். கடைசி மற்றும் மூன்றாவது ஆட் டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட், பிஎஸ்ஜி குழுக்கள் மோதுகின்றன. இந்த மூன்று போட்டிகளும் தேசிய விளையாட்டரங்கில் நடை பெறவுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் அடுத்த பருவம் தொடங்குவதற்கு முன் ஆசியா, அமெரிக்க நாடுகளுக்கு முன்னணி காற்பந்துக் குழுக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது வழக்கம்.
இவ்வாண்டு ஆசிய நாடுகளில் ஒன் றான சிங்கப்பூரில் மட்டும் இப் போட்டி நடைபெறுகிறது. கடந்தாண்டு சிங்கப்பூரில் நடந்த போட்டியில் செல்சியை 2-1 எனவும் பயர்ன் மியூனிக் குழுவை 2=0 எனவும் வீழ்த்திய மிலன் வெற்றி வாகை சூடியது. அதுபோல் சீனாவின் ஷங்காய் நகரில் நடந்த போட்டியில் கடந்த ஆண்டு ஆர்சனல் வெற்றி பெற்றது.

