லண்டன்: ஸ்டோக் சிட்டி காற் பந்துக் குழுவின் வெற்றியைக் கடைசி நிமிடத்தில் தட்டிப் பறித்து அக்குழுவை 'ரெலி கேஷன்' நிலையிலே நீடிக்கச் செய்தது வெஸ்ட் ஹேம். நேற்று அதிகாலை நடந்த இபிஎல் ஆட்டத்தில் 79வது நிமி டத்தில்தான் முதல் கோலே விழுந்தது. அந்தக் கோலால் முன்னிலை பெற்ற ஸ்டோக் சிட்டி வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தது. ஆனால் குரோச் போட்ட அக் கோலை, 90வது நிமிடத்தில் சமன் செய்தது வெஸ்ட் ஹேம். அக்குழுவின் மாற்று ஆட்டக் காரராக களமிறங்கிய கரோல், ஆரோன் கிறிஸ்வெல் கொடுத்த பந்தைக் கோலாக மாற்றினார். அதன் பிறகு ஹெர்னான்டஸ் வலைக்குள் செலுத்திய பந்தால் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தது வெஸ்ட் ஹேம்.
ஆனால், கரோலின் கையில் பட்டுச் சென்றதால் நடுவர் அதை கோலாக ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கோல் உட்பட வெஸ்ட் ஹேம்மின் மூன்று கோல்களை நடுவர்கள் நிராகரித்துவிட்டனர். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. 'ரெலிகேஷன்' நிலையில் இருந்து ஏழு புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது வெஸ்ட் ஹேம். ஆனால், ஸ்டோக் குழுவோ 'ரெலிகேஷன்' நிலையில் இருந்து தப்பிக்க எஞ்சி உள்ள ஐந்து ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

