'கிரிக்கெட்டின் ரொனால்டோ விராத் கோஹ்லி'

1 mins read

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான வெயின் பிராவோ, விராத் கோஹ்லி கிரிக்கெட்டின் ரொனால்டோ என்று புகழாரம் சூட்டியுள்ளார். கோஹ்லி குறித்து பேசிய வெயின் பிராவோ, "விராத் கோஹ்லியைக் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் ஒப்பிடுவது சிறந்தது. "நான் விராத் கோஹ்லியைப் பார்க்கும்போது, கிரிக்கெட்டில் ரொனால்டோவைப் பார்க்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக கோஹ்லி இந்திய அணிக்காகவும் பெங்க ளூரு அணிக்காகவும் விளை யாடும்போது அவரது ஆட் டத்தைப் பார்த்துள்ளேன். "அவரது திறமையை நான் கட்டாயம் பாராட்டுகிறேன். அவர் ஈடுபாட்டுடன் விளையாடும் கிரிக்கெட்டை வைத்துப் பார்க் கும்போது அனைத்துச் சாதனை களுக்கும் தகுதியானவர்," என்று பாராட்டிப் பேசினார்.