லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களில் ஒன் றான ஆர்சனலின் நிர்வாகிப் பதவியிலிருந்து இப்பருவத்துடன் விடைபெறுவதாக அறிவித்துள் ளார் ஆர்சன் வெங்கர், 68 (படம்). 1996ஆம் ஆண்டில் ஆர்சனல் உடன் இணைந்த வெங்கரின் 22 ஆண்டுகால நிர்வாகத்தின்கீழ் அக்குழு மூன்று முறை இபிஎல் பட்டத்தையும் ஏழு முறை எஃப்ஏ கிண்ணத்தையும் வென்றுள்ளது. "கவனமான பரிசீலனைக்குப் பின்னும் குழு நிர்வாகத்துடன் ஆலோசித்த பிறகும் இம்முடிவை எடுத்துள்ளேன். நிர்வாகி பதவி யிலிருந்து விலக இதுவே சரியான தருணம் எனக் கருதுகிறேன்," என்று வெங்கர் தெரிவித்தார். மறக்க முடியாத பல ஆண்டு களுடன் இவ்வளவு காலத்திற்கு ஆர்சனல் குழுவில் தாம் சேவை யாற்ற வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றிக்கடன்பட்டு இருப்பதாகவும் வெங்கர் கூறினார்.
முழுமையான கடப்பாட்டுடனும் நேர்மையாகவும் குழுவைத் தாம் நிர்வகித்ததாகக் குறிப்பிட்ட இவர், குழுவின் பணியாளர்கள், ஆட்டக்காரர்கள், நிர்வாகத்தினர், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். வெங்கர் ஆர்சனல் குழுவை விட்டு விலகுவது மிகக் கடின மான தருணம் எனக் குறிப்பிட்டார் அக்குழுவின் முக்கியப் பங்கு தாரரான ஸ்டேன் குரோன்கே. வெங்கரின் நிர்வாகத்தின்கீழ் பிரிமியர் லீக்கில் இதுவரை 823 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்சனல், அவற்றில் 473 முறை வென்றுள்ளது. நடப்புப் பருவத்தில் அக்குழு ஆறாம் நிலையில் இருந்தபோதும் யூரோப்பா லீக்கில் இன்னும் நீடிப் பதால் அக்கிண்ணத்தை வென்று வெங்கருக்குக் காணிக்கையாக் கும் என எதிர்பார்க்கலாம்.

