அட்லெட்டிகோ அதிர்ச்சி தோல்வி

1 mins read

மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து லீக் பட்டியலின் இரண்டாம் நிலையிலுள்ள அட்லெட்டிகோ மட்ரிட் காற்பந்துக் குழு, பதினோராம் நிலையிலிருக்கும் ரியால் சோ‌ஷியடாட் குழுவிடம் 0=3 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சியளித்தது. இதனால் அக்குழுவைவிட 12 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் நிலையில் இருக்கும் பார்சிலோனா குழு, தனது அடுத்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் லீக் பட்டத்தைக் கைப்பற்றிவிடும். இமனல் அல்குவாசில் நிர்வாகியாகப் பொறுப்பேற்றது முதல் சோ‌ஷியடாட் குழுவின் செயல்பாடு மேம்பாடு கண்டு வருகிறது. முந்தைய இரு ஆட்டங்களில் ஜிரோனாவை 5-0 என்ற கோல் கணக்கிலும் லாஸ் பால்மாசை 1-0 என்ற கோல் கணக்கிலும் அக்குழு வீழ்த்தி இருந்தது. நேற்றைய ஆட்டத்திலும் யுவான்மி இரு கோல்களையும் வில்லியன் ஜோசே ஒரு கோலையும் அடித்தனர்.