புதுடெல்லி: இவ்வாண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர்களின் பெயர் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில், இந் தியா 66 பதக்கங்களுடன் மூன்றா வது இடத்தைப் பிடித்தது. டேபிள் டென்னிஸ் மட்டுமல்லா மல் பேட்மிண்டன், மல்யுத்தம், துப் பாக்கி சுடுதல், குத்துச்சண்டை போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்தனர். இந்நிலையில், டேபிள் டென் னிஸ் போட்டியில் தங்கம் உட்பட நான்கு பதக்கங்கள் வென்ற இந் திய வீராங்கனை மணிகா பத்ரா வின் பெயர் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் ஆகியவை வென்றிருந்தார்.
நான்கு பதக்கங்கள் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமை யும் மணிகா பத்ராவுக்குக் கிடைத் துள்ளது. மேலும் டேபிள் டென்னிசின் ஆண்களுக்கான குழு பிரிவில் தங்கப் பதக்கமும் ஆண்கள் இரட் டையர் பிரிவில் வெண்கலப் பதக்க மும் வென்ற இந்திய வீரர் ஹர்மீத் தேசாயின் பெயரும் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைக்கான கடி தத்தை இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, வீரர் ஹர்மீத் தேசாய் ஆகிய இருவரும் டேபிள் டென்னிசில் தங்கப் பதக்கம் வென்றனர். படம்: ஊடகம்

