வெங்கரின் பதவிக்கு கடும் போட்டி

1 mins read
9d7cb7a1-46fa-47ac-ac79-7e3b1c94e276
-

லண்டன்: ஆர்சன் வெங்கர், ஆர் சனல் குழுவின் நிர்வாகி பொறுப் பில் இருந்து விலகுவது குறித்து தகவல் வெளியானதிலிருந்து, அவருக்கு நன்றிகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே, வெங்கருக்குப் பிறகு ஆர்சனலின் நிர்வாகியாக யார் வரப்போகிறார்கள் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. 68 வயது வெங்கரின் ஆர்சனல் குழுவுடனான 22 ஆண்டுகால பயணம் நடப்பு பருவத்தோடு முடிவுக்கு வருவதாக நேற்று முன் தினம் அவர் அறிவித்தார்.

வெங்கர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஆர்சனல் அணிக்குப் புதிய நிர்வாகியாக பொரு‌ஷிசியா டோர்ட்மென்ட் குழுவின் முன்னாள் பயிற்று விப்பாளர் தோமஸ் டச்சல் அல்லது ஆர்சனல் குழுவின் முன்னாள் மத்திய திடல் வீரர் பேட்ரிக் வியரா ஆகிய இருவரில் ஒருவர் வர அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படு கிறது. வெங்கரின் கீழ் பேட்ரிக் வியரா விளையாடிய 2003--04ஆம் பருவத்தில் ஆர்சனலுக்கு இங்கி லிஷ் பிரிமியர் லீக் தொடர் தோல்வியில்லா பயணமாக இருந் தது. பேட்ரிக் வியரா விளையாடிய காலக்கட்டத்தில் மூன்று முறை லீக் பட்டத்தையும் மூன்று முறை எஃப்ஏ கிண்ணத்தையும் ஆர்சனல் வென்றுள்ளது.

வெங்கருடன் ஆர்சனல் நிர்வாகியாக விரும்பும் அன்சிலோட்டி. கோப்புப் படம்