குறைந்த ஓவரில் அதிக ஓட்டங்கள்; புனேவில் சென்னை அணி சாதனை

குறைந்த ஓவரில் அதிக ஓட்டங்கள்; புனேவில் சென்னை அணி சாதனை

1 mins read
b59ee829-65e8-4ccd-aba6-8b1c0b0a65ab
-

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி 13 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனை படைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சென்னை யில் போராட்டம் நடந்ததால் சென்னை விளையாடும் போட்டி கள் புனேவிற்கு மாற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கள் மோதிய ஆட்டம் புனேவில் நடந்தது. முதலில் பந்தடித்த சென்னை அணி 20 ஓவர்களில் 204 ஓட்டங்கள் குவித்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்கார ராக களமிறங்கிய ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்து களில் சதமடித்தார்.

இது ஐபிஎல் போட்டியில் ஷேன் வாட்சனின் மூன்றாவது சதம் ஆகும். 2013ல் ராஜஸ்தான் அணி யில் விளையாடிய வாட்சன் சென் னைக்கு எதிராக சதம் அடித் தார். 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி 140 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இதன்மூலம் சென்னை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் சென்னை அணிக்காக விளையாடும் வாட்சன் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய வாட்சன் சென்னைக்கு எதிராக சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. படம்: ஏஎஃப்பி