வெங்கர்: ஒற்றுமை இல்லாதது வேதனையளிக்கிறது

வெங்கர்: ஒற்றுமை இல்லாதது வேதனையளிக்கிறது

1 mins read

லண்டன்: ஆர்சனல் குழுவை விட்டு வெளியேறும் அதன் நிர் வாகி வெங்கர், ஆர்சனல் ரசிகர் களிடையே ஒற்றுமை இல்லாதது வருத்தமளிக்கிறது என்று கூறியுள் ளார். தமது பதவி விலகலை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார் ஆர்சன் வெங்கர். ஆர்சனல் விளையாடும் போட்டி களின்போது மைதானத்தில் வெங்கருக்கு எதிராக ரசிகர்கள் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர். இந்நிலையில், நேற்று அதி காலை நடந்த ஆட்டமொன்றில் 4-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் குழுவை வீழ்த்தி இபிஎல் பட்டியலில் ஆறாவது இடத்தை உறுதி செய்தது ஆர்சனல்.

வெங்கரின் 22 ஆண்டுகால வழிகாட்டுதலின்கீழ் பிரிமியர் லீக்கில் கடந்த பருவத்திலும் இப் பருவத்திலும்தான் ஆர்சனல் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்கவில்லை. "நான் சோர்வுறவில்லை. ஆர்ச னல் குழுவிற்கு உலகெங்கும் மரி யாதை உள்ளது என நான் நினைக் கிறேன். ஆனால் உலகம் முழுவ தும் உள்ள ரசிகர்களிடையே ஒற் றுமை இல்லாதது வேதனை அளிக் கிறது. எனக்கு ரசிகர்கள் மீது கோபம் இல்லை. ஏனெனில் அவர் கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிகிறது," என்றார்.