டென்னிஸ்: மான்டி கார்லோ பட்டம் வென்றார் நடால்

டென்னிஸ்: மான்டி கார்லோ பட்டம் வென்றார் நடால்

1 mins read
495ff61a-d1ab-41bc-a664-0e4676969656
-

பாரிஸ்: பிரான்சில் நடைபெற்ற மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபாயல் நடால் (படம்) 11வது முறையாக வெற்றியாளர் பட்டம் வென்றுள் ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முதல் நிலை வீரரான ஸ்பெயினின் நடாலும் ஜப்பானின் கெய் நி‌ஷிகோரியும் தகுதி பெற்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரபேல் நடால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

முதல் செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் டில் அதிரடியாக விளையாடிய நடால் அந்த செட்டையும் 6-2 எனக் கைப்பற்றினார். இதன் மூலம் 94 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நடால் வெற்றி யாளர் பட்டத்தை வென்று, தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார்.