தொழிற்முறை காற்பந்து விளையாட்டா ளர்கள் சங்கத்தின் 2017-18ஆம் ஆண்டிற் கான சிறந்த விளையாட்டாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் லிவர்பூல் காற்பந்து நட்சத்திரம் முகமது சாலா (படம்). கெவின் டி பிரய்ன, ஹேரி கேன், லரோய் சனே, டாவிட் சில்வா, டேவிட் டி கியா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார் 25 வயது சாலா. சிறந்த இளம் விளையாட்டாள ராக சிட்டியின் சனே தேர்ந் தெடுக் கப்பட்டார். "சக விளையாட்டாளர் கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த முடிவு மகிழ்ச்சியாகவும் பெருமை யாகவும் உள்ளது," என்றார் சாலா. சாலாவின் நிர்வாகியாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகக் கூறினார் யர்கன் கிளோப்.
சாலா சிறந்த காற்பந்து வீரராகத் தேர்வு
1 mins read
-

