மேன்யூவுடன் மோதுகிறது செல்சி

மேன்யூவுடன் மோதுகிறது செல்சி

2 mins read
255d994e-6152-485c-962e-04ec08c65ab8
-

லண்டன்: அரையிறுதிப் போட்டி யில் சௌத்ஹேம்டன் குழுவை வீழ்த்திய செல்சி எஃப்ஏ கிண்ண பட்டத்தை வெல்வதற்கான இறுதி போட்டியில் மான்செஸ்டர் யுனை டெட் குழுவுடன் மோதுகிறது. செளத்ஹேம்டன் குழுவுடன் வெம்பிளி அரங்கில் நேற்று அதி காலை நடந்த அரையிறுதிப் போட்டியில் 2-0 என வாகை சூடியது செல்சி. முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றில் சமநிலையில் முடிந் தது. செளத்ஹேம்டனின் ஒருங் கிணைந்த தற்காப்பு ஆட்டத்தால் செல்சியால் கோல் எதுவும் போட முடியவில்லை. பிற்பாதி ஆட்டத்தின் முதல் நிமிடமே ஹசார்ட் உதைத்த பந்தை கோலாக்கிய ஒலிவியர் ஜிரூ செல்சிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 26 எஃப்ஏ கிண்ணப் போட் டிகளில் விளையாடிய ஜிரூ போட்ட 22வது கோல் இது. சௌத்ஹேம்டன் குழுவின் நேதன் ரெட்மண்ட், சார்லி ஆஸ் டினின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. மேலும் ஆஸ்டினின் குறுக்கீட் டால், செல்சி கோல் காப்பாளர் சொந்த எல்லைக்குள் பந்தைத் தவறவிட்டதை நடுவர்கள் கோலாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், ஜிரூவிற்குப் பதில் அல்வாரோ மொராட்டாவை மாற்று ஆட்டக்காரராக களமிறக் கினார் நிர்வாகி கோண்டே. ஆட்டம் முடிய 10 நிமிடங்களே இருந்தபோது களம் கண்ட மொராட்டா, அடுத்த நிமிடமே கோல் போட்டு செல்சியின் எஃப்ஏ கிண்ண இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்தார். கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடிய சௌத்ஹேம்டன், மொராட்டாவின் 'ஹாட்ரிக்' கோல் போடும் முயற்சியைத் தடுத்துவிட்டது.

எதிரணி வலைக்குள் பந்தை உதைத்து கோல் போடும் செல்சியின் ஒலிவியர் ஜிரூ. படம்: ராய்ட்டர்ஸ்