புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி யில் மீண்டும் பஞ்சாப் அணியிடம் தோற்றது டெல்லி. குறைந்த இலக்கைக்கூட எட்ட முடியாமல் அடைந்த இந்தத் தோல் விக்குப் பந்தடிப்பாளர்களைச் சாடியுள் ளார் அந்த அணித் தலைவர் காம்பீர். "முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழந்ததால் வெற்றி பெறுவது கடினம் தான்.
"ஓட்டங்களை எடுக்கும்போதே அதிகமான விக்கெட்டை இழந்துவிட் டோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி பஞ்சாப்பை 143 ஓட்டத்திற்குள் கட்டுப்படுத்தினர். ஆனால் பந்தடிப்பாளர்கள் ஏமாற்றம் அளித்துவிட்டனர். "பிரித்வி ஷாவுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. இனி வரும் ஆட் டங்கள் அனைத்திலும் வெல்ல வேண் டிய நெருக்கடி இருக்கிறது," என்றார் காம்பீர்.
5வது வெற்றியைப் பதிவு செய்து பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வின் கூறுகையில், "இந்தப் போட்டியிலும் வென்றது மகிழ்ச்சி. எல் லோரும் ஆலோசித்துத்தான் கடைசி ஓவரை முஜிப்பிடம் கொடுத்தோம். "வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தீவிரமாக நினைத்தோம். இத னால் புதிய முயற்சியாக கடைசி ஓவரை முஜிப்பிடம் கொடுத்தோம். "டெல்லி அணி வீரர்கள் அழுத்தம் காரணமாக அடித்து ஆட நினைத் தார்கள். அது எங்களுக்கு விக்கெட் டாக மாறியது," என்றார்.
டெல்லி பெரோனா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் காயம் காரணமாக கிறிஸ் கெய்ல் விளையாடவில்லை. அதனால் அந்த அணியை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களுக்குச் சுருட்டியது டெல்லி. எளிதான இலக்கை விரட்டி வெற்றி பெற்று விடலாம் என்ற டெல்லி அணி யின் நினைப்பிற்கு அதன் பந்தடிப்பாளர் கள் ஈடுகொடுக்கவில்லை. மளமளவென விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதனால் டெல்லி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 45 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்தார். பஞ்சாப் தரப் பில் ஆண்ட்ரூ டை, ராஜ்புத், முஜிபுர் ரகுமான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பஞ்சாப்பிடம் ஏற்கெனவே ஆறு விக்கெட்டுகள் இழப்பில் தோற்ற டெல் லிக்கு இது நடப்புத் தொடரில் 5வது தோல்வியாகும்.

