எவர்ட்டன்: எவர்ட்டன் காற்பந்து வீரர் வால்கோட் போட்ட ஒரே கோலால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் எட்டாம் இடத்திற்கு முன்னேறியது எவர்ட்டன். ஆட்ட நேரம் முழுவதற்கும் விழுந்த அந்த ஒரே கோலால் நியூகாசலை நசுக்கியது எவர்ட்டன். கடந்த மூன்று மாதங்களில் வால் கோட் போட்ட முதல் கோலாகும் இது.
முன்னாள் நியூகாசல் நிர்வாகியான சேம் அலர்டைசின் வழி காட்டுதலில் விளையாடி வரும் எவர்ட்டன் வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்தார்கள். ஆனால், அலர்டைசோ தனது வீரர்கள் நன்றாக விளையாடினார்கள் என்று கூறுகிறார். "கடைசி 10 நிமிடங்கள் தவிர, ஆட்டம் முழுவதும் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்," என்றார்.
முற்பாதி ஆட்டம் சலிப்பு தட்டிய நிலையில், வால்கோட் போட்ட கோலை தொடர்ந்து விறுவிறுப்பானது. கோலை சமன் செய்யும் நோக்கில் நியூகாசல் மாற்று ஆட்டக்காரர் டுவைட் கெய்லைக் களமிறக்கியது. ஆனாலும் அதற்கு பலன் கிடைக் காத நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது எவர்ட்டன்.
நியூகாசலுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் எவர்ட்டன் வீரர் ஜோர்டன் பிக்ஃபர்ட். படம்: ராய்ட்டர்ஸ்

