சிங்கப்பூர்: இவ்வாண்டு சிங்கப்பூ ரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான தொலைக் காட்சித் தொகுப்புக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதற்காக ஒளிபரப்புச் சேவை வழங்கும் சிங்டெல், ஸ்டார்ஹப், மீடியாகார்ப் ஆகிய மூன்றும் முதன்முறையாக பங்காளித்துவம் மேற்கொண்டுள்ளன. வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான உள்ளூர் தொலைக்காட்சி சந்தா கட்டணம் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவேதான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இத்தொகுப்பிற்கான சந்தா கட்டணம் $112.35 ஆகும். அதே சமயம் மே 22ஆம் தேதிக் குள் இத்தொகுப்பைப் பெறுகிறவர் களுக்கு $94.16 எனச் சலுகை விலையில் கிடைக்கும். இதுதவிர ஒரு சில போட்டிகளை மீடியாகார்ப் ஒளிவழியிலும் கண்டுகளிக்க லாம்.
காற்பந்து: தொலைக்காட்சி சந்தா கட்டணம் உயரவில்லை
1 mins read

