லண்டன்: ஸ்பானிய காற்பந்துக் குழுவான அட்லெட்டிகோ மட்ரிட் டும் இங்கிலிஷ் காற்பந்துக் குழுவான ஆர்சனலும் யூரோப்பா லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. ஆர்சனலின் சொந்த மண்ணில் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதி காலை 3.05 மணிக்கு நடைபெற உள்ளது. ஸ்பானிய லா லீகாவின் முன் னணிக் குழுக்களான பார்சிலோனா, ரியால் மட்ரிட் ஆகியவற்றோடு போட்டி போடும் அளவிற்கு முன் னேற்றம் கண்டுள்ளது அட்லெட் டிகோ மட்ரிட் குழு. குறிப்பாக, அட்லெட்டிகோவின் நிர்வாகியாக கடந்த 2011ஆம் ஆண்டு டியேகோ சிமியோன் பொறுப்பேற்றது முதல் அக்குழு வின் தற்காப்பு ஆட்டம் மெருகேறி வருகிறது. இதனால் நடப்பு லா லீகா பருவத்தில் ரியால் மட்ரிட் குழுவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்து உள்ளது அக்குழு. சொந்த மண்ணில் அட்லெட்டி கோவின் தோல்வியில்லா பயணம் கடந்த 11 ஆட்டங்களாகத் தொடர் கிறது.
ஆனால், எதிரணி மண்ணில் நடந்த கடைசி நான்கு ஆட்டங்க ளில் மூன்றில் தோல்வியையே தழுவியுள்ளது அட்லெட்டிகோ. இந்நிலையில் தனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இந்த முதல் சுற்று ஆட்டத்தை ஆர்சனல், சரியாகவும் சாதகமாகவும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அட்லெட்டிகோவின் கோல் காப்பாளர் ஒப்லக்கைத் தாண்டி கோல் போடுவது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அதற்காக ஆர்சனல் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். மேலும் ஆர்சனலை விட்டு வெற்றிக் கிண்ணத்தோடு வெளி யேற வேண்டுமானால், வெங் கருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இது மட்டுமே.

