தொடர் தோல்வியால் தடுமாறும் மும்பை அணி

தொடர் தோல்வியால் தடுமாறும் மும்பை அணி

2 mins read
83151ae6-d4fe-4aee-8177-4d9cdac5191b
-

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட் டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 118 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கைக்கூட எட்ட முடியாமல் 18.5 ஓவரிலேயே 87 ஓட்டங்க ளுக்கு ஆட்டமிழந்தது அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப் பாளர் ஜெயவர்தனேவுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தோல்வி பற்றி பேசிய அவர், "ஒவ்வோர் ஆண்டும் ஒரேமாதிரி ஆட முடியாது. வீரர்கள் வளர்ச்சி யடைய வேண்டும். "கடின உழைப்புத் தேவைப்படு கிறது. வெறும் திறமை மட்டும் நம்மைக் கொண்டு சேர்க்காது," என்றார். இதற்கிடையே, கடந்த ஆண்டு வெற்றியாளரான மும்பை இந் தியன்ஸ் அணியின் பந்தடிப்பு, பந்துவீச்சு நாளுக்கு நாள் மோச மாகி வரும் நிலையில் அதன் ரசி கர்கள் கோபத்தில் உள்ளார்கள். கடந்த 4 போட்டிகளிலும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த ரோகித் சர்மா, இப்போட்டி யிலும் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது ரசிகர்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.

எனவே, டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ரோகித் சர்மாவைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். முன்னதாக நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்தடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 20 ஓவர்கள் முடிவில் ஹைத ராபாத் அணி 118 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

மும்பை அணியில் இரு பந்தடிப்பாளர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டினர். அவர்களில் ஒருவரான குருணால் பாண்டியா 24 ஓட்டங்கள் எடுத்தார். படம்: ஏஎஃப்பி