சாலாவின் அபார கோல்கள்; லிவர்பூலிடம் பணிந்தது ரோமா

சாலாவின் அபார கோல்கள்; லிவர்பூலிடம் பணிந்தது ரோமா

2 mins read
1937e1b0-ec41-4f0a-a687-6c348615f13b
-

லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் அரை யிறுதிப் போட்டியின் முதல் சுற்றில் தன்னுடைய அபார கோல்களால் லிவர்பூலின் சாலா ரோமாவைப் பணிய வைத்தார். தன்னுடைய முந்திய குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தின் முதல் 45 நிமிடங் களுக்குள் இரட்டை கோல் போட் டார் சாலா. இது தவிர மூன்றாவது கோல் போடுவதற்கு சடியோ மனேவிற்கு உதவியாகவும் இருந்தார் சாலா. இப்பருவத்தின் தொடக்கத்தில் 34 மில்லியன் பவுண்டுக்கு ரோமா குழுவில் இருந்து லிவர்பூலுக்குச் சென்றார் சாலா. மனேவைத் தொடர்ந்து, ஃபெர் மினோ 7 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட லிவர்பூலின் கோல் எண்ணிக்கை ஐந்தானது.

இந்நிலையில், சாலாவுக்குப் பதில் டேனி இங்சை களமிறக்கி னார் யர்கன் கிளோப். ஆனால் கிளோப்பின் இந்த முடிவு ரோமா விற்குச் சாதகமாக அமைந்தது. ஏனெனில் ரோமா அதன் பிறகு பெனால்டி வாய்ப்பு உட்பட இரண்டு கோல்களைப் போட்டுவிட்டது. முதல் சுற்றில் ரோமா மூன்று கோல்கள் வித்தியாசத்தில் தோற் றாலும் எதிரணி மண்ணில் போட்ட இரண்டு கோல்கள், அக்குழுவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லக்கூடும். காலிறுதிச் சுற்றில் பார்சிலோ னாவிடம் 4=4 என்ற ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையில், சமநிலை கண்டாலும் எதிரணி மண்ணில் போட்ட ஒற்றைக் கோலால் ரோமா அரையிறுதிக்கு முன்னேறியது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் சாலாவை மாற்றி யது தொடர்பாக கிளோப் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவற் றுக்குப் பதிலளித்த கிளோப், "சாலா காயமடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவரை மாற்றி னேன். என்னுடைய முடிவு தவறு என்று கூறினால், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை," என்றார். இதற்கிடையே ரோமா கோல் போடுவதற்குள் லிவர்பூல் வீரர் அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சேம்பர்லேன் காயம் அடைந்து வெளியேறியது கிளோப்பை கவலையடையச் செய்திருக்கும். இப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் வரும் 3ஆம் தேதி இத்தாலியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளது.

லிவர்பூல் வீரர்களோடு முட்டி மோதி பந்தைத் தட்டிப்பறித்த ரோமா வீரர் பேட்ரிக் ‌ஷிக். கடைசி நேரத்தில் இரண்டு கோல்களைப் போட்டது ரோமா. படம்: ராய்ட்டர்ஸ்