புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவர் கௌதம் காம் பீர் பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் எட்டு அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில், டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டி களில் ஐந்து போட்டிகளில் தோல் வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இதையடுத்து தொடர் தோல்வி களுக்குப் பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவர் கௌதம் காம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து டெல்லி அணியின் புதிய அணித் தலை வராக ஷ்ரேயாஸ் ஐயர் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணி அடுத்து நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கோல்கத்தா அணியை எதிர்கொள்ள உள் ளது. புதிய அணித் தலைவர் தலைமையில் களமிறங்க இருக்கும் டெல்லி அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

