கோஹ்லி, டிராவிட், மந்தனா பெயர்கள் விருதுக்கு பரிந்துரை

கோஹ்லி, டிராவிட், மந்தனா பெயர்கள் விருதுக்கு பரிந்துரை

1 mins read

புதுடெல்லி: இந்திய அரசின் விளையாட்டுத் துறை விருது களுக்கு கிரிக்கெட் வீரர்கள் கோஹ்லி, டிராவிட், தவான், வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அர்ஜுனா விருதுக்காக இந் திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ‌ஷிகர் தவானும் பெண்கள் அணியைச் சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் டென்னிஸ் வீரர்களான ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகி யோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்று விப்பாளராக இருந்து உலக கிண்ணம் வெல்ல முக்கிய பங்கு வகித்த முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் பெயர் பரிந்துரைக் கப்பட்டுள்ளது. கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியின் பெயரையும் சுனில் கவாஸ்கரை வாழ்நாள் சாதனை யாளர் விருதான தயான் சந்த் விருதுக்கும் கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்து உள்ளது.