இங்கிலாந்துக்கு பின்னடைவு

இங்கிலாந்துக்கு பின்னடைவு

1 mins read

லண்டன்: லிவர்பூல் காற்பந்துக் குழுவின் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சேம்பர்லேன் உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். நேற்று முன்தினம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரோமா குழுவிற்கு எதிராக சேம்பர்லேன் விளையாடி னார். அப்போது ரோமா வீரர் அலெக் சாண்டர் கோலராவிற்கு கடும் சவால் கொடுக்கும் வகையில் அவர் விளையாடினார். இந்நிலையில் ஆட்டத்தின் 18வது நிமிடமே மூட்டு தசைநார் வலி காரணமாக ஆட்டத்தை° விட்டு சேம்பர்லேன் வெளியேறி னார்.

அதன் பிறகு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை அடுத்து, லிவர்பூல், "காயமடைந்து உள்ள சேம்பர்லேனால் இப்பருவத்தில் இனி தொடர்ந்து விளையாட முடியாது. அவர் எப்போது மீண்டும் விளையாடுவார் என்று தெரியவில்லை," என்று தனது இணையப்பக்கத்தில் தெரிவித் திருந்தது. சேம்பர்லேன் காயமடைந்து வெளியேறியதால், லிவர்பூல் ஐந்து கோல்கள் முன்னிலை பெற்ற நிலையில், முன்னெச்ச ரிக்கையாக சாலாவை விலக்கிக் கொண்டார் கிளோப்.