பெங்களூரு: பெங்களூரு கிரிக் கெட் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டோனி, அம்பதி ராயுடுவின் ஆட்டத்தால் சென்னை அணி இமாலய இலக்கை எட்டிப் பிடித்தது. பெங்களூரு அணி நிர்ண யித்த 205 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு அம்பதி ராயுடு நல்ல அடித்தளம் அமைத் தார். இருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க அவ்வணி தடுமாறியது.
சென்னை அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்திருந்த போது 66 பந்தில் 132 ஓட்டங்கள் தேவை என்ற நெருக்கடி இருந்தது. இந்த நிலையில், ராயுடுவுடன் கைகோர்த்த டோனி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருவரும் இணைந்து 101 ஓட்டங்கள் எடுத் திருந்தபோது ராயுடு ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ராயுடுவுக்குப் பிறகு களமிறங்கிய பிராவோ முதல் பந்தில் பவுண்டரியும் 2வது பந்தில் சிக்சரும் அடித்து முத் திரை பதித்தார். 4வது பந்தில் டோனி, சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனால் மீண்டும் டோனி விளாசிய சிக்சரால், சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி பற்றி பேசிய டோனி, "அனுபவ வீரர்கள் இளம் வீரர்களுக்கு உதவ வேண்டும். தங்கள் அனுபவங்களை அவர் களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. "அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடினார். ஓட்ட எண் ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்க அவர் காரணமாக இருந் தார்," என்றார். "கடைசி கட்டத்தில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தது தவறானது. "200 ஒட்டங்களுக்கு மேல் எடுத்தும் வெற்றி பெறமுடிய வில்லை என்பது வருத்தமாக இருக்கிறது," என்றார் கோஹ்லி.

