சொந்த மண்ணில் பயர்ன் தோல்வி

சொந்த மண்ணில் பயர்ன் தோல்வி

1 mins read
de0ae0a0-c04a-4e68-8bcd-500382267181
-

மியூனிக்: காற்பந்து வீரர் ரொனால் டோவின் கோல் இல்லாமல் பயர்ன் மியூனிக் குழுவை வீழ்த்தியது ரியால் மட்ரிட். நேற்று அதிகாலை மியூனிக்கின் சொந்த அரங்கில் நடந்த சாம்பி யன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் சுற்றில் ஒரு கோல் முன்னிலையில் ரியால் மட்ரிட் வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக இக் கிண்ணத்தை வெல்லத் துடிக்கும் ரியால் மட்ரிட், நேற்று தற்காப்பில் சற்று தடுமாறியது.

ஆனால் அபா ரமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே 28வது நிமிடத்தில் கிமிக் போட்ட கோலால் முன்னிலை பெற்றது பயர்ன். கிமிச் உதைத்த பந்தை ரியால் மட்ரிட் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் தடுக்கத் தவறியதால் தான் அக்குழு ஒரு கோலைவிட்டு கொடுக்க நேர்ந்தது. ஆனால், அதை 44வது நிமிடத் தில் மார்செலோவின் கோலால் சமன் செய்தது ரியால் மட்ரிட். அதைத் தொடர்ந்து பிற்பாதி ஆட்டத்தின்போது 57வது நிமி டத்தில் மாற்று ஆட்டக்காரர் அசின்சோ இன்னோர் கோலை போட்டு ரியாலின் வெற்றியை உறுதி செய்தார்.

பயர்ன் மியூனிக் குழுவின் ஒரே கோலை சமன் செய்தார் ரியால் மட்ரிட் குழுவின் மார்செலோ. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மட்ரிட் வெற்றி பெற்றது. படம்: ஏஎஃப்பி