மோசமான முடிவு: ஆதங்கப்படும் வெங்கர்

மோசமான முடிவு: ஆதங்கப்படும் வெங்கர்

2 mins read
4b07b369-d87c-49a5-8588-13ed1252fe29
-

லண்டன்: யூரோப்பா லீக் காற் பந்துக் கிண்ண இறுதிப் போட் டிக்கு முன்னேறும் வாய்ப்பை வலு வாக்கிக்கொள்ளும் சூழல் இருந் தும் அதைத் தவறவிட்டதற்குத் தமது வீரர்களே காரணம் என்று ஆர்சனல் குழுவின் நிர்வாகி ஆர்சன் வெங்கர் தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் 10வது நிமிடத்தி லேயே அட்லெட்டிகோ மட்ரிட் குழு வீரர் சீமெ வெர்சால்கோ இரு மஞ்சள் அட்டைகளைப் பெற்று திடலைவிட்டு வெளியேறியதால் எஞ்சிய நேரம் பத்து வீரர்களைக் கொண்டு ஆடும் நிலைக்கு அக் குழு தள்ளப்பட்டது.

இதனால் தற்காப்பில் அக்குழு வலுவிழக்க, ஆட்டம் முழுவதும் ஆர்சனல் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், பல கோல் வாய்ப்புகள் கிடைத்தும் அதை ஆர்சனல் வீரர்கள் கோலாக்கத் தவறினர். முற்பாதி ஆட்டம் கோலின்றி முடிய, 61வது நிமிடத்தில் அலெக் சாண்டர் லாக்கஸெட் தலையால் முட்டி கோலடித்து ஆர்சனலுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இருப்பினும், ஆட்டம் முடிய எட்டு நிமிடங்களே இருந்தபோது தற்காப் பில் பெரும் தவறுகளை இழைக்க, அதைச் சாதகமாக்கிக்கொண்டு அட்லெட்டிகோவின் கிரீஸ்மன் கோலடிக்க, ஆட்டம் சமனானது. சொந்த எமிரேட்ஸ் அரங்கில் நடந்த இந்த ஆட்டம் சமநிலை யில் முடிந்தபோதும் ஆர்சனலைப் பொறுத்தமட்டில் இது தோல்வி அடைந்ததைப் போலத்தான் எனச் சொல்லப்படுகிறது.

போட்டி குறித்து கருத்துரைத்த வெங்கர், "இன்றைய ஆட்டம் உண் மையிலேயே ஒரு கசப்பான அனு பவம். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு கிட்டிய போதும் அதை இழந்துவிட்டது வருத்தம் அளிக்கிறது. இதைவிட ஒரு மோசமான முடிவு இருக்க முடியாது. இருந்தாலும் குறிப்பிட்ட ஒருவரை தோல்விக்குக் காரண மாக கைகாட்ட முடியாது," என்றார்.

கடைசித் தருணத்தில் முன்னிலையைத் தவறவிட்டு, வெற்றியைப் பறிகொடுத்த சோகத்தில் ஆர்சனல் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்