'இன்றும் இவரே கவனிக்கத்தக்க ஆட்டக்காரர்'

'இன்றும் இவரே கவனிக்கத்தக்க ஆட்டக்காரர்'

1 mins read
5a5bf160-162c-479f-ba2c-1ba6dcfcf926
-

பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் 34 பந்துகளில் 70 ஓட்டங்களை அடித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார் அதன் தலைவர் மகேந்திர சிங் டோனி. அன்று அவர் ஆடிய விதம், ஒரு காலத்தில் பந்துவீச்சாளர் களைத் தமது அதிரடியால் மிரட் டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் சர் விவியன் ரிச்சர்ட்சை பிரமிக்கச் செய்யும்படி யாக இருந்தது. "டோனி தமது சிறப்பான பந்த டிப்புத் திறனுக்குத் திரும்பியுள்ளார்.

பெங்களூரு அணிக்கெதி ரான போட்டியின் இறுதி ஓவர் களில் சென்னை அணியின், அதன் ரசிகர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைத் தமது தோள்களில் அவர் சுமந்தார். அவரும் அம்பதி ராயுடுவும் சிறப்பாக ஆடி, பெரும் இலக்கை விரட்டுவதற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தந்த னர். அதுவே, கடைசி ஓவர்களில் களமிறங்கிய பிராவோவிற்கும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக் கையை அளித்திருக்கும்," என்று வானளாவப் புகழ்ந்தார் ரிச்சர்ட்ஸ்.