பார்சிலோனா: 2010 உலகக் கிண்ணக் காற்பந்தின் இறுதி ஆட்டத்தில் கோலடித்து ஸ்பெயின் அணிக்குக் கிண்ணம் வென்று தந்த மத்திய திடல் ஆட்டக்காரர் ஆந்த்ரெஸ் இனியஸ்டா, 33, இந்தப் பருவத்துடன் பிரபல பார்சிலோனா குழுவிலிருந்து விடைபெறுவதாக அறிவித்து இருக்கிறார். கடந்த பதினாறு பருவங்களாக பார்சிலோனா குழுவைப் பிரதிநிதித்து வரும் இனியஸ்டா 669 போட்டிகளில் பங்கேற்று, 31 கிண்ணங்களை வென்று தந்துள்ளார். அதோடு, 2008, 2012 ஆண்டுகளில் யூரோ கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். பார்சி லோனாவை எதிர்த்தாடாதபடி ஐரோப்பிய காற்பந்தில் தான் இனி இருக்கப்போவதில்லை என்ற அவர், சீனாவிற்கு இடம் பெயர்வார் எனத் தெரிகிறது.
ஐரோப்பாவில் இருந்து கிளம்பும் இனியஸ்டா
1 mins read

