'மோதல் போக்கு வேண்டாம்'

'மோதல் போக்கு வேண்டாம்'

1 mins read
d7e1beec-5cee-4226-9f57-cc56b2bdbf8b
-

மான்செஸ்டர்: கடந்த 22 ஆண்டு களாக ஆர்சனல் காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக இருந்து வரும் ஆர்சன் வெங்கர், 68, இந்தப் பருவ இறுதியுடன் அக் குழுவைவிட்டுப் பிரிகிறார். இந்த நிலையில், அக்குழுவுட னான தமது கடைசி மாதத்தை எந்தப் பிரச்சினையிலும், மோதலி லும் ஈடுபடாமல், சர்ச்சையிலும் சிக்காமல் அமைதியான முறையில் கழிக்க விரும்புவதாக வெங்கர் தெரிவித்துள்ளார். இன்றிரவு நடக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் பரம எதிரியான மான்செஸ்டர் யுனை டெட் குழுவை அதன் சொந்த அரங்கில் எதிர்கொள்கிறது ஆர் சனல் குழு.

வெங்கருக்கும் யுனைடெட் நிர்வாகி ஜோசெ மொரின்யோவிற் கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். நிர்வாகிகளாக ஒருவரை ஒருவர் எதிர்த்தாடும்போது அவர் கள் வார்த்தைப் போரில் ஈடுபடா மல் இருந்ததில்லை. இன்றும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், "எனது கடைசி வாரங்களில் என்னைக் கொஞ்சம் அமைதியாக இருக்கவிடுங்கள். இன்னொரு மோதலுக்கு என்னைத் தள்ளாதீர்கள்," என்று ஊடகத்தினரிடம் வெங்கர் கேட்டுக்கொண்டார்.