ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்தியா

ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்தியா

1 mins read

பேங்காக்: இளையர் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி குழுக்களின் அபார செயல்பாடு தொடர்கிறது. அரையிறுதிப் போட்டிகளில் இந்திய ஆடவர் குழு 9-2 என்ற கோல் கணக்கில் பங்ளாதேஷையும் மகளிர் குழு 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தின. இறுதிப் போட்டியில் ஆடவர் குழு மலேசியாவையும், மகளிர் குழு சீனாவையும் நேற்று எதிர்த்தாடவிருந்தன.