அனைத்துலக வெற்றியாளர்கள் கிண்ணம்: இன்று முதல் நுழைவுச்சீட்டு விற்பனை

அனைத்துலக வெற்றியாளர்கள் கிண்ணம்: இன்று முதல் நுழைவுச்சீட்டு விற்பனை

1 mins read

இவ்வாண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அனைத்துலக வெற்றியாளர்கள் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று தொடங்குகிறது. பிரெஞ்சு லீக் 1 வெற்றியாளரான பிஎஸ்ஜி, யூரோப்பா லீக்கின் அரையிறுதிக்கு முன்னேறிய ஆர்சனல், அட்லெட்டிகோ மட்ரிட் ஆகிய குழுக்கள் தேசிய விளையாட்டு அரங்கில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். குறைந்தபட்ச நுழைவுச்சீட்டுக் கட்டணம் $28. கூடுதல் விவரங்களுக்கு www.internationalchampionscup.sg எனும் இணையத் தளத்தை நாடலாம்.