இத்தாலி காற்பந்துக் குழு பயிற்றுநர் பதவியை நிராகரித்தார் அன்சலோட்டி

இத்தாலி காற்பந்துக் குழு பயிற்றுநர் பதவியை நிராகரித்தார் அன்சலோட்டி

1 mins read

மிலான்: இத்தாலி காற்பந்துக் குழுவிற்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பு தேடிவந்தபோதும் கார்லோ அன்சலோட்டி அதை நிராகரித்துவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. நான்கு முறை உலகக் கிண்ண வெற்றியாளரான இத்தாலி வரும் ஜூன் மாதம் ரஷ்யாவில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறவில்லை. இதையடுத்து, அக்குழுவின் பயிற்றுவிப்பாளராக இருந்த கியன் பியரோ வென்ச்சுரா பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு 58 வயது அன்சலோட்டி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் சில நாட்கள் யோசனைக்குப் பிறகு அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் இத்தாலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. செல்சி, ரியால் மட்ரிட், ஏசி மிலான், யுவென்டஸ், ரோமா, பிஎஸ்ஜி எனப் பல முன்னணி ஐரோப்பிய காற்பந்துக் குழுக்களின் நிர்வாகியாக இருந்துள்ள அன்சலோட்டி, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் லீக் பட்டங்களையும் வென்றுள்ளார்.