டோனி: அடக்கத்தைக் கற்றுத்தரும் தோல்விகள்

டோனி: அடக்கத்தைக் கற்றுத்தரும் தோல்விகள்

1 mins read
fa7fe255-3de3-4996-a583-2855a2b08126
-

புனே: தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த சென்னை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப் பிற்கு 169 ஓட்டங்களை எடுத் தது. அதிகபட்சமாக ரெய்னா ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங் களை விளாசினார்.

அடுத்து ஆடிய மும்பை அணி இரண்டு பந்துகள் எஞ்சி இருந்த நிலையில், இரண்டு விக்கெட்டுகளை மட்டும் பறி கொடுத்து வெற்றியை எட்டியது. போட்டிக்குப் பின் பேசிய சென்னை அணியின் தலைவர் டோனி, "இதுபோன்ற தோல்வி களே ஒருவருக்கு அடக்கத்தைக் கற்றுத்தரும். தொடர்ந்து வென்று வந்தால், எந்த அம்சத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என் பது தெரியாமல் போய்விடும். தனிப்பட்டவர்களின் செயல்பாடு களை நாங்கள் நம்பியிருந்து விட்டோம். இன்னும் 10-15 ஓட் டங்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஆனாலும், லீக்கில் இது ஆரம்பகட்டம்தான்," என்று சொன்னார்.

ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை விளாசி மும்பை அணியை வெற்றிபெறச் செய்த அணித்தலைவர் ரோகித் சர்மா. படம்: ஏஎஃப்பி