மட்ரிட்: இன்னும் நான்கு ஆட் டங்கள் எஞ்சியுள்ள நிலையில் நடப்பு ஸ்பானிய லா லீகா பருவத்தை இரண்டாமிடத்தில் முடிக்க முடியும் என்று திடமாக நம்புகிறது ரியால் மட்ரிட் காற் பந்துக் குழு. நட்சத்திர வீரர் ரொனால்டோ இல்லாத நிலையிலும் லெகா னெஸ் குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் அக்குழு வீழ்த் தியதே அதற்குக் காரணம். இந்த வெற்றியின் மூலம் 72 புள்ளிகளுடன் இரண்டாமிடத் தில் இருக்கும் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவைத் தொட்டுவிடும் நிலையை ரியால் எட்டியிருக் கிறது. இப்போது அட்லெட்டிகோ வைவிட ரியால் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளது. லெகானெசுக்கு எதிரான ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் 'பைசிக்கிள்' கிக் மூலம் ரியா லின் முதல் கோலை அடித்தார் கேரத் பேல். முற்பாதி முடிய ஒரு நிமிடமே இருந்தபோது ரியாலின் முன்னிலையை இரட்டிப்பாக்கி னார் மாயோரல். 65வது நிமி டத்தில் பிரெஸ் அடித்த கோல் லெகானெசுக்கு ஆறுதலளித்தது.
ரியால் மட்ரிட் குழுவின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்த கேரத் பேல் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

