லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முடித்து, அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெற முடியும் என்ற செல்சி குழுவின் நம்பிக்கையை உயிர்ப் புடன் வைத்துள்ளது சுவான்சி சிட்டிக்கு எதிராக நேற்று கிட்டிய வெற்றி. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் செஸ்க் ஃபேப்ரிகாஸ் அடித்த ஒரே கோலால் செல்சி வெற்றியை ருசித்தது. இது இபிஎல்லில் அவருக்கு 50வது கோல்.
மேலும், இபிஎல்லில் 50 கோல்களை அடித்ததோடு, நூறு கோல்களுக்கு மேல் போட உதவிய முதல் வெளிநாட்டு ஆட்டக்காரர் என்ற பெருமையும் அவருக்குக் கிட்டியது. இவ்வெற்றியின் மூலம் 4ஆம் இடத்திலிருக்கும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்கும் செல்சிக் கும் இடையிலான புள்ளி வித்தி யாசம் இரண்டாகக் குறைந்துள் ளது.
இன்று பின்னிரவு வாட்ஃபர்ட் குழுவிடம் தோற்று, அதன்பின்னும் ஓர் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு மண்ணைக் கவ்வும் பட்சத்தில் செல்சியின் சாம்பியன்ஸ் லீக் கனவு நனவாக வாய்ப்புண்டு. போட்டிக்குப் பின் பேசிய செல்சி நிர்வாகி அன்டோனியோ கோன்டே, "சாம்பியன்ஸ் லீக் கிற்கு முன்னேற விரும்பும் எங்களுக்கு மூன்று புள்ளிகளும் கிடைத்ததில் மகிழ்ச்சி.
சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெறுவது எங்கள் கைகளில் இல்லை என்றாலும் அடுத்து வரும் எல்லா ஆட்டங்களி லும் ஸ்பர்ஸ் குழு வெற்றி பெறவேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி. அது அவ்வளவு எளிதல்ல. ஆயினும், காற்பந்து எளிதான விளையாட்டல்ல என்பதையும் நாங்கள் அறிவோம்," என்று சொன்னார். இதற்கிடையே, செல்சியிடம் தோற்றதால் சுவான்சி குழு 'ரெலி கேஷன்' நிலைக்குக் கீழிறங்கி, அடுத்த பருவத்தில் விளையாடும் தகுதியை இழக்கும் அபாயத்திற் குத் தள்ளப்பட்டுள்ளது.
செல்சியின் வெற்றி கோலை அடித்த ஃபேப்ரிகாசை (வலது) பாராட்டும் ஜிரூ (இடது), ஹஸார்ட். படம்: ராய்ட்டர்ஸ்

