மட்ரிட்: நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி மூன்று கோல்களை அடித்து 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்த, இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே பார்சிலோனா காற்பந்துக் குழு ஸ்பானிய லா லீகா பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. டிபோர்ட்டிவா லா கொருனா குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா 4=2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு லீக்கில் இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட தோற்றிராத அக்குழு, 26 ஆட்டங்களில் வெற்றியும் எட்டு ஆட்டங்களில் சம நிலையும் கண்டுள்ளது.
பத்து நாட்களுக்குமுன் செவிய்யா குழுவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பானிய அரசர் கிண்ணத்தைக் கைப்பற்றிய பார்சிலோனா குழு, இந்தப் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் மட்டும் சறுக்கியது.

