நூறு கோல்களைக் கடந்த மான்செஸ்டர் சிட்டி

நூறு கோல்களைக் கடந்த மான்செஸ்டர் சிட்டி

1 mins read

லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஏற்கெனவே பட்டத்தைக் கைப்பற்றிவிட்ட நிலை யில் அடுத்ததாக பல சாதனை களை முறியடிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவை நேற்று முன்தினம் இரவு 4=1 என்ற கோல் கணக்கில் சிட்டி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது, அக்குழு நூறு கோல்கள் என்ற மைல்கல்லை எட்டியது.

2009=10 பருவத்தில் செல்சி குழு 103 கோல்களை அடித்து இருந் ததே முந்தைய சாதனை. இந்த நிலையில் இப்போது 102 கோல் களை அடித்திருக்கும் சிட்டி, இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால் அச்சாதனையை நிச்சயம் முறியடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதேபோல், ஒரே பருவத்தில் அதிக வெற்றி, அதிக புள்ளிகள் ஆகிய அம்சங்களிலும் சிட்டி முந்தைய சாதனைகளை முறி யடிக்க மிகுந்த வாய்ப்புள்ளது.